சனி, மார்ச் 16, 2013

மாணவர்களின் அறப்போராட்டம்!! 2

கோவையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த போதும் மாணவர் போராட்டம் இன்றும் தீவிரமாக நடைபெற்றது. ஆங்காங்கே சாலை மறியல் முற்றுகை என பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தனித்தமிழ் ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோவையில் இன்றும் மாணவர் போராட்டம் பல இடங்களில் நடைபெற்றது.கோவை சட்ட கல்லூரி மாணவர்கள்  6வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜபக்‌ஷே படத்தை எரித்த மாணவிகள்

அவர்களுக்கு ஆதரவாக சட்ட கல்லூரி மாணவிகள் ராஜபக்சேவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், விளக்குமாறால் அடித்தும் தீ வைத்து எரித்தனர்.அப்போது தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கேரள மாணவர்களும் போராட்டட்தில் குதிக்க வேண்டும் என சட்ட கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் மறியல்

இந்நிலையில் சட்ட கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கல்லூரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் காந்திபுரம் பகுதியில் தீடீர் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.அப்போது காவல் துறையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.அப்போது காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்..காவல் துறையினரின் இந்த நடவடிக்கை கண்டிக்கதக்கது என திராவிடர் விடுதலை இயக்க தலைவர் கொளத்தூர் மணி கண்டனம் தெரிவித்தார்.

இலங்கை நிறுவனம் முற்றுகை

இந்நிலையில் கோவை சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள 'டம்ரோ' என்ற இலங்கையை சேர்ந்த பர்னிச்சர் நிறுவனத்துக்குள் நுழைந்து அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக பர்னிச்சர் வாங்க வந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.இதனையடுத்து போராடத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட மானவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

களமிறங்கிய பள்ளி மாணவர்களும் கைது

இதே போன்று ஓண்டிபுதூர் பகுதியில் திருச்சி சலையில் இலங்கையில் தனி ஈழத்துக்கு பொது வாக்ககெடுப்பு நடத்த கோரி மறியலில் ஈடுபட்ட மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

இதே போன்று கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் 30க்கும் சட்ட கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரதியார் பலகலை கழக மாணவர்கள் 25 பேர் ஐந்தாவது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இதே போன்று கோவை சக்தி சாலையில் உள்ள எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி மாணவர்களும்,இன்போ டெக் பொறியியல் கல்லூரி மாணவர்களும் சத்தியமங்கலம் சாலையில் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கோவையில் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- நன்றி - தமிழ்மக்கள்குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக