சனி, மார்ச் 16, 2013

மாணவர்களின் அறப்போராட்டம்!! 3

சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று நள்ளிரவில் சென்னை கடற்கரை காந்தி சிலையின் கீழ் மெழுகு வர்த்தி ஏற்றி அற வழியில் தங்கள் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடங்கினார்கள் . காலை வரை அங்கேயே உண்ணா நிலையில் இருப்பதாகவும் காவல் துறையிடம் அனுமதி கேட்டனர் . இருப்பினும் காவல் துறை அதற்கு செவி சாய்க்கவில்லை . சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் எங்கும் அறவழியில் போராட மக்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டு உள்ளது . டெல்லியில் கூட பத்து நாட்கள் வரை போது திடலில் மக்கள் போராட அனுமதி உண்டு . அன்னா ஹசாரே கூட ராம் லீலா மைதானம் என்ற திடலில் பத்து நாட்கள் உண்ணா நிலையில் இருந்து போராட்டம் நடத்தினார் . அதுபோல் தமிழகத்தில் ஒரு பொது இடம் இல்லை . தமிழ்கள் கூடி நின்று அழுவதற்கு கூட ஒரு இடம் இல்லை தமிழகத்தில் . அந்த அளவிற்கு தமிழக அரசு மக்களின் மேல் அடக்குமுறையை மேற்கொண்டுள்ளது . இந்நிலையில் மாணவர்கள் வேறு வழியின்றி தடையை மீறி காந்தி சிலையின் கீழ் உண்ணா நிலை போராட்டத்தை தொடர்ந்தனர் . ஆனால் தமிழக அரசோ அவர்கள் போராட்டத்தை வழக்கம் போல் மதிக்கவில்லை .

காவல்துறை உச்சகட்ட வன்முறை மாணவர்கள் மீது கட்டவிழ்கப்பட்டது. அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மீது உச்சகட்ட வன்முறையை ஏவி விட்டது காவல்துறை. காலை 6 மணி உண்ணாவிரதம் இருந்துவிட்டு சென்றுவிடுகிறோம் என்று கூறியும் மாணவர்களை அடித்து, தரதரவென இழுத்து சென்றது. உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் அனைவர் மீதும் மனிதநேயமற்ற முறையில் வார்த்தைகளால் குறிப்பிட முடியாத அளவுக்கு வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களில் ஒருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த செய்தியை உடனடியாகப் பரப்பவும். மாணவர்களை மீட்டு அவர்களின் போராட்டதிற்க்குத் துணை நிற்க வேண்டும் என மாணவர்கள் பொது மக்களை கேட்டுக் கொண்டனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக