சனி, ஆகஸ்ட் 21, 2010

தீரர் தின விழா 2010







கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியம், புன்னம் கிராமத்தில் தீரன் பண்பாட்டுகழகம் நடத்திய தீரர் தின விழா 2010 கடந்த 06.08.2010 அன்று மாலை நடைபெற்றது .

தமிழ்நாட்டில் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக போரிட்டு, நெற்கட்டுஞ் சேவல்
பூலித்தேவன் (1767), சிவகங்கை முத்து வடுகநாதர் (1772), ராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி (1795), சிவகங்கை வேலுநாட்சியார் (1798), மருது சகோதரர்கள் (1801), என்று பல ஆட்சியாளர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.

ஆட்சி அதிகாரத்தில் எந்த பொறுப்பிலும் இல்லாமலேயே மக்களை திரட்டி, படை நடத்தி, அந்நிய ஆதிக்க படைகளை மும்முறை வென்று புதிய வரலாறு படைத்த தீரன் சின்னமலை , வஞ்சகத்தால் பிடிபட்டு ( 1805) ஆடி 18 அன்று சங்ககிரி கோட்டையில் வீரத்தளபதிகள் தம்பணன் , கிலேதார் , கருப்ப
செர்வையுடன் , தூக்கு மரத்தில் உயிர் துறந்தார், இவர்களுடன் தமிழ் மண்ணுக்காக மக்களுக்காக தன்னயேதந்த மாவீரர்களின் நினைவைபோற்றிய தீரர் தினவிழா மிக சிறப்பாக நடைபெற்றது .
அது சமயம் 16 வது ஆண்டாக பாராட்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது . கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற புன்னம் அரசு (ஆ. தி . ந ) மேல்நிலைப்பள்ளி 10. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், கடந்த 11 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், திரு. வீ. துரைசாமி, அவர்களை பாராட்டி ''பண்பாளர்'' எனும் உயரிய விருது வழங்கப்பட்டது,
நிகழ்விற்கு க.நாச்சிமுத்து வழக்கறிஞர், தலைமையில் ஆ.தேவராஜ், புன்னம் ஊராட்சித்தலைவர் முன்னிலையில், ஏ .கே. ரமேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அமரர் திரு, க.ரெங்கசாமி கவுண்டர், நினைவு பரிசினை வெங்கரையம்மன் யார்ன்ஸ் ராமநாதன் வழங்கினார், முருகன் போர்வேல்ஸ் பி,சுபிரமணியும் திருச்சி மண்டல தொலைதொடர்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.கருணாநிதியும், க.பரமத்தி ஒன்றியகுழு உறுப்பினர் மல்லிகா சுபிரமனியமும்,
புன்னம் பெரியூர் அம்மன் ஸ்டோர் பொ. துரைசாமியும், புன்னம் ஊராட்சி துணை தலைவர் கே. ஏ . பழனிசாமியும், பட்டதாரி ஆசிரியர் அ . க. செல்வமணியும் , குளத்தூர் அ . பழனிசாமியும், கரூர் தமிழர் முன்னணியும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
தீரர் தின விழா 2010 சிறப்பு மலர் வெளியிடப்பட்டது, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்வு நடைபெற்றது, ச.சு. தமிழ்ச்சேரன் நன்றிகூற விழா இனிதே நிறைவடைந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக