செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

பெங்களுருவிலிருந்து தமிழர்களம்......

19 ஆண்டுகளாகக் கன்னட வெறியர்களின் எதிர்ப்புக் காரணமாகத் திறக்கப்படாமல் கோணிப்பையால் மூடிவைக்கப்பட்டிருந்த தெய்வத் திருவள்ளுவர் சிலை கர்நாடக முதல்வர் மாண்புமிகு எடியுரப்பா அவர்களின் நல்லெண்ண நன்முயற்சியால் திறந்து வைக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகின்றது.
கருநாடகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் திரு. தேவதாஸ், புலவர் பாவிசைக்கோ, மற்றும் கருநாடகத்திலிருந்து 05.08.2010 அன்று முதன்முதலாக வெளியிடப்பட்ட கிழமையிதழான ''தமிழர்களம்'' வெளியீட்டாளரும் ஆசிரியருமான திரு பிரகாசு அவர்களும், மணிவண்ணன், கோபி, சுனில், குமார், இரவி, அரசேந்திரன், சாலமன், பாபு, கோவலன், வில்சன், விஜய் மற்றும் பல கருநாடகத்தமிழர்களும் தம் கைகளில் ''தமிழர்களம்'' முதல் இதழைப் பெருமையுடன் ஏந்தி, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துத் தம் மகிழ்வினைக் கொண்டாடினர்.




DSCF0022_5(4x6).jpgDSCF0022_5(4x6).jpg
620K View Download
DSCF0016_2(4x6).jpgDSCF0016_2(4x6).jpg
561K View Download

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக