செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

காவிரி காத்தான் திரு.பூ.அர.குப்புசாமி அய்யாவின் 78 வது பிறந்தநாள் விழா




காவிரி காத்தான் திரு.பூ.அர.குப்புசாமி அய்யாவின் 78 வது பிறந்தநாள் விழா 02.08.11 அன்று கருவூரில் அவரது இல்லத்தில் தமிழர் களம் சார்பாக கொண்டாடப்பட்டது . நிகழ்வில் அணைத்து தமிழ் உணர்வாளர்களும், அய்யாவின் நண்பர்களும் கலந்து கொண்டு அவரின் நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் , அய்யாவின் வழியில் தமிழர் தேசியத்தை வென்றெடுப்போம் என்றும் உறுதிபூண்டனர். நிகழ்வில் தமிழர் கள சட்ட ஆலோசகர் , வழக்கறிஞர் ஜீவானந்தம் அய்யாவின் பணிகளை பாராட்டி பேசினார். முடிவில் தமிழர் கள இலக்கிய பிரிவு பொறுப்பாளர் ரவிச்சந்திரன் நன்றியுரை வழங்கினார் . ஓவியர் இல பரணன், உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் .
நிகழ்வில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1. திரு.பூ.அர.குப்புசாமி அய்யாவின் வழியில் தமிழர்களை ஒருங்கிணைப்பது என்றும்,
2. கொளத்தூரில் கொள்ளணை கட்ட தமிழக அரசை வலியுறுத்தவும், அணைக்கு ''பூ.அர.குப்புசாமி கொள்ளணை'' என்று பெயரிட வேண்டும் என்றும்,
3. நொய்யல் ஆற்றின் பாசன கிளை வாய்காலுக்கு ''நொய்யல் தந்தை '' பூ.அர.குப்புசாமி பெயரிட வேண்டும் எனவும்
4. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிவடைந்து இன்னமும் சிறையில் வாடும் நளினி, பேரறிவாளன், ஆகியவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் .
5. திரு.பூ.அர.குப்புசாமி அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட வேண்டும் எனவும்
6. வாங்கல் - மோகனூர் ஆற்றுபாலதிற்கு
பூ.அர.குப்புசாமி அய்யாவின் பெயரை வைக்க வேண்டும் எனவும்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தமிழர் களம் . ஊடகபிரிவு . கரூர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக