திங்கள், ஆகஸ்ட் 29, 2011

''கச்சதீவு நமதே''






29.08.11 திருச்சி
திருச்சி அய்கப் இல்லத்தில் திரு .சீதையின் மைந்தன் அவர்கள் தயாரித்த ''கச்சதீவு நமதே'' என்ற குறுவட்டு தமிழர் களத்தின் சார்பாக வெளியீடு விழா நிகழ்ந்தது. நிகழ்வின் முன்னதாக தமிழர்களின் மரண தண்டனையை தடை செய்யகோரி தன் இன்னுயிரை நீத்த சகோதரி செங்கொடி அவர்களுக்கு தமிழர் களத்தின் சார்பாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து குறுவட்டு வெளியிடப்பட்டது. குறுவட்டினை உலகத் தமிழர் பேரமைப்பினை சேர்ந்த திரு .பொன்னிறைவன் அவர்கள் வெளியிட திரு . வீ, நா. சோமசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டார் . அதை தொடர்ந்து திரு . பொன்னிறைவன் அவர்கள் வாழ்த்தியும் கச்ச தீவை மீட்க நாம் போராட வேண்டும் என்றும் பேசினார் . திரு . வீ .நா . சோமசுந்தரம் அவர்கள் பேசுகையில் இந்தியா மோசடி செய்து தமிழர்களின் உரிமைகளை பறித்துள்ளது என்றும் நாம் இந்திய அரசுக்கும் , தமிழக அரசியல் வாதிகளுக்கும் எவ்வாறெல்லாம் அடிமையாக வாழ்கிறோம் என்பதையும் தெளிவாக்கினார் . அடுத்ததாக பேசிய தமிழர் களத்தின் பொது செயலாளர் தமிழ்த் திரு . அரிமாவளவன் பேசுகையில் ஈழச் சிக்கலுக்கும் , தமிழக மீனவர்கள் கொல்லபடுவதற்கும் காரணமாக இருக்கும் இந்திய அரசின் கூட்டமைப்பிலிருந்து தமிழ் நாடு தனி நாடாக பிரியாமல் நாம் இழந்த உரிமைகளை மீட்க முடியாது என்றும் , திராவிடத்தை தமிழ் நாட்டிலிருந்து வேரடி மண்ணோடு களைய வேண்டும் எனவும் தமிழர்கள் திராவிட அரசியல் வாதிகளை இன்னமும் நம்பிகொண்டிருப்பதுதான் மோசமான ஒன்று. என்றும் இனிமேலும் நாம் ஒரு தமிழரை கூட இழக்ககூடாது , அதற்காக நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே இருக்கும் உடமைகளை காக்கவும் முடியும் என்று பேசினார் . அடுத்ததாக ஏற்புரை வழங்கிய திரு . சீதையின் மைந்தன் அவர்கள் கச்சதீவு நமது மண் அதை எப்பாடு பட்டாவது மீட்க வேண்டும் , அதற்கு தமிழர்கள் ஒன்றாக வேண்டும் . கச்சதீவு வெறும் மீனவர்கள் பிரச்சினை மட்டுமல்ல அது ஒட்டுமொத்த தமிழர்களின் உரிமை பிரச்சினை .என்று பேசினார். நிறைவாக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த தமிழர் களத்தின் மணப்பறை பகுதி பொறுப்பாளர் திரு .ராமு நன்றியுரை வழங்கினார் . நிகழ்வில் பெரும்பாலான வழக்கறிஞர்களும் , மாணவர்களும் பங்கு கொண்டனர் .நிகழ்வின் முன்னதாக தமிழர் பண்பாட்டு கலை குழு மாணவிகளின் தமிழர் தாயகத்தை மீட்கவேண்டும் தனி தமிழ் நாடு பிறக்கவேண்டும் என்ற பாடல் எழுசியூட்டுவதாக இருந்தது.
செய்தி : ஊடகபிரிவு . தமிழர் களம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக