செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

''தொல்காப்பியத்தின் காலம் '' நூல் வெளியீடு






கடந்த ஞாயிறு அன்று சென்னையில் ஆய்வறிஞர் திரு குணா அவர்கள் எழுதிய ''தொல்காப்பியத்தின் காலம் '' என்ற அரியதொரு ஆய்வு நூல் வெளியிடப்பட்டது . நிகழ்வை சென்னை மாவட்ட தமிழர் கள பொறுப்பாளர் திரு சாம்சன் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார் .
தமிழர் களத்தின் தமிழர் பண்பாட்டு கலை குழுவினரின் கலை நிகழ்வுடன் துவங்கியது. பாதை அமல் அவர்களின் கல்லூரி மாணவிகளின் மேடை நாடகம் அனைவரையும் சிந்திக்கும் படி இருந்தது. நிகழ்வில் டேவிட் பிரபாகரன் அவர்கள் அய்யாவின் நூலை அறிமுகம் செய்து துவக்க வுரை நிகழ்த்தினார் . நூலை திரு. பழனியப்பன் விஸ்வநாதன் வெளியிட முனைவர் தெய்வநாயகம் அவர்கள் பெற்றுக் கொண்டார் . தமிழர்களத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ''காக்க மறந்தாயே '' என்ற ஈழத் தமிழர்களின் அவலத்தை கண்முன் காட்டும் குறுவட்டினை பாவலர் செம்பியன் அவர்கள் வெளியிட திரு. பொன்னிறைவன் அவர்கள் பெற்றுக் கொண்டார் . புலவர் பாவிசைகோ , முனைவர் அருகோ, தோழர் பெ. மணியரசன் , பாவலர் இராமச்சந்திரன் , தமிழர்களத்தின் அரிமாவளவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் . ஆய்வறிஞர் குணா அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார் . நிகழ்வின் இறுதியாக மை பா . சேசுராசு அவர்கள் நன்றியுரை வழங்கினார் . முன்னதாக பேராசிரியர் சாம்சன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் . பாவலர் பாமரன் அவர்கள் அய்யாவின் நூல்களை வரிசையாக தொகுத்து பாடலாக பாடியது சிறப்பாக இருந்தது. விழாவில் கல்லூரி மாணவர்களும் தமிழ் அறிஞர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி : ஊடகபிரிவு , தமிழர் களம் .

1 கருத்து:

  1. நிகழ்வுக்கு எமது வாழ்த்துக்கள்! புத்தகம் விற்பனைக்கு தேவை யாரை அனுகுவது? எனது எண்-9940446650

    பதிலளிநீக்கு