செவ்வாய், டிசம்பர் 06, 2011

வியக்கவைக்கும் தமிழர்களின் கடல் மேலாண்மை !






வியக்கவைக்கும் தமிழர்களின் கடல் மேலாண்மை !

அய்கப் அரங்கம்
திருச்சி .

தமிழரின் தொன்மை என்ற தலைப்பில் , தமிழரின் கடல்வழி மேலாண்மை குறித்தும் உலகில் மிக பழமையான உயிரினமான ஆமை மனித வாழ்வில் கடல்வழி மேலாண்மைக்கு எவ்விதத்தில் உதவி வருகிறது என்பது குறித்தும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்திவரும் ஆய்வாளரும் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் தமது வாழ்நாளை பங்களிப்பு செய்துவரும் திரு.கலிங்கா பாலு அவர்களின் ஆய்வுகள் குறித்த கருத்தரங்கம் திருச்சி அய்கப் அரங்கத்தில் நிகழ்ந்தது.
நிகழ்வில் கடலில் வாழும் ஆமைகள்தான் உலகின் மூத்த கடலோடிகள் என்றும் அவற்றின் அறிவை பயன்படுத்திதான் தமிழர்கள் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கப்பல் பயணம் மேற்கொண்டனர் என்ற வியக்க வைக்கும் தகவலை தந்ததுடன் அவற்றின் எச்சங்கள் இன்றும் தமிழர்களின் வாழ்வில் பின்னி பிணைத்துள்ளதை அறியும் போது தமிழர்களின் அறிவாற்றல் வெளிபடுகிறது . அதேசமயம் இன்று ஆமைகள் கடல் வேட்டைகாரர்களால் அழிக்கப் பட்டு வருகிறது என்ற செய்தி வருத்தத்தை அளிக்கிறது .மேலும் உலகின் மூத்த இனமான தமிழினம் இன்று தன்னம்பிக்கை இழந்து காணப்படுவதற்கு அவர்களின் தாழ்வு மனப்பான்மைதான் காரணம் என்றும் விளக்கினார் . நாளுக்கு நாள் கடல் மனித வாழிடங்களை உள்வாங்கி வருவதும், சுற்றுப்புற சூழல் மாசுபட்டு வருவதும் நமது வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கும் எனவும் அதே சமயம் தமிழர்களின் பழமையான கடல் மேலாண்மை இன்று அடக்கி வைகப்பட்டுள்ளதையும் அவர்களின் அறிவாற்றல் மதிக்கபடாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார் .
ஆய்வரங்கில் அவரது ஆய்வுகள் குறித்த ஒளிப்படக் காட்சி வியக்க வைத்ததோடல்லாமல் பல்வேறு நாட்டவர்களும் தமிழரின் தொன்மை குறித்து அறிய விரும்புவதும் நம்மை மகிழ்வில் ஆழ்த்தியது.. இருப்பினும் வெறும் பழம்பெருமை பேசி பொழுதை கழிப்பதற்காக மட்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை எனவும் இந்த ஆய்வானது தமிழர்களின் வாழ்வினை மேம்படுத்தவும் உலகில் தனித்துவமான இனம் இன்று கீழான நிலையில் இருப்பதை மாற்றவும் தான் மேற்கொள்ளபடுவதாக அவர் தெரிவித்தார் .
நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களும் மற்றவர்களும் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர் . அவர் தமிழர்களின் தொன்மை பதினேழு லச்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று நமக்கு சான்றுகளோடு விளக்கியவிதம் நம்மை பெருமை கொள்ள செய்தது.
இந்த அருமையான நிகழ்வை தமிழர் களத்தின் மேற்குமண்டல பொறுப்பாளர்கள் செய்திருந்தனர் . நிகழ்விற்கு தமிழர் களத்தின் போது செயலாளர் தமிழ்த்திரு அரிமாவளவன் தலைமை தாங்கினார் . ஆய்வறிஞர் குணா முன்னிலை வகித்தார் . தமிழர்களத்தின் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் , புதுவை மாநில பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .
செய்தி : ஊடகபிரிவு
தமிழர் களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக