புதன், டிசம்பர் 14, 2011

முல்லை பெரியாறு அணை உரிமையை காக்க முற்றுகைப் போராட்டம் !








கரூர்
14.12.2011

கேரளா அரசின் அடாவடித் தனத்தை கண்டித்தும் , நடுவண் அரசின் பாராமுகதன்மையை கண்டித்தும், கரூர் நகரில் திடீர் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் முல்லைபெரியாறு அணையின் உரிமையை விட்டுத்தர மாட்டோம் , என்று முழக்க மிட்டவாறு சாலை மறியலிலும் ஈடுபட்டனர் . பின்னர் மலையாளிகளின் கடைகளுக்கு முன்பாக மூடக்கோரி முழக்கமிட்டனர் . தொடர்ந்து கோவை சாலை வழியாக நடுவண் அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு ஊர்வலமாக சென்றனர் . ஜாய் ஆலுக்காஸ் நகை கடை முன்பாக முற்றுகை போராட்டம் நடத்திய போது திடீர் என தாக்கியதில் காவல் துறையை சார்ந்தவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டது . உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார் . பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல் துறையினர் கைது செய்து திருச்சி நடுவண் சிறைக்கு கொண்டு சென்றனர் .
இன்று மாலை நிகழ்ந்த இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், தமிழர் களம் , பாட்டாளி மக்கள் கட்சியினர் , நாம் தமிழர் கட்சி ஆகிய அமைப்புகளை சார்ந்த தமிழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி ஊடகப் பிரிவு : தமிழர் களம் , கரூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக