சிவகங்கை
14.12.2011
சிவகங்கை மாவட்டம் , சாலைகிராமத்தில் கேரளா முதலமைச்சரின் உருவபொம்மையை எரித்த தமிழர் களம் அமைப்பினரை சார்ந்த அறிவழகன் முருகன், செந்தில், கோவிந்தன், ரமேசு , ராமு, மனோகரன், ஆகியோரை தமிழக காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர் .
1956 இல் மொழி வழி மாநிலமாக பிரிக்கப் பட்ட போது இடுக்கி உள்ளிட்ட தமிழர் நிலபகுதிகள் பெரும்பான்மையாக மலையாளிகளால் வந்கவர்பு செய்யப்பட்டது .அந்த நிலப் பகுதிகளை மீண்டும் தமிழ் நாட்டோடு சேர்க்கவேண்டும் என்று இடுக்கி மாவட்ட தமிழர்கள் போராடி வருகின்றனர் . அதை சீர்குலைக்கும் வகையில் உம்மன் சாண்டி தமிழர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துள்ளார் . அதை கண்டிக்காத நடுவண் அரசை கண்டித்தும் , உம்மன் சாண்டியின் உருவ பொம்மையை தமிழர் களம் அமைப்பினர் எரிக்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்தி ; ஊடகப்பிரிவு. தமிழர் களம் .

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக